Friday, March 15, 2013

"மாணவர்களைத் தூண்டுகிறாரா ஜெ.?”

தமிழக அரசு கொடுத்துள்ள விள்மபரத்தின் மேல்பகுதியில் ஜெ. புகைப்படம். அதன் கீழே மிரட்டும் விழிகளுடன் ஏழு புலிக்குட்டிகள் இருந்தன. 15-ம் தேதி வெள்ளிக்கிழமை, வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் நடக்க இருக்கும் வனத்துறைக் கட்டடங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா விளம்பரம் அது....
பார்த்தீரா... புலிக்குட்டிகளை! வனத்துறைக் கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டுகின்ற விழாவில் இன்னொரு விஷயத்தையும் ஜெ. செய்ய இருக்கிறார். வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருக்கும் 7 புதிய புலிக்குட்டிகளுக்குப் பெயர் சூட்டுகிறாராம் ஜெ.
புலியை சரியான நேரத்தில்தானே தொடுகிறார் ஜெ.
ஈழப் பிரஸ்னையை வைத்து தமிழகம் கொந்தளிக்கும் கடலாக மாறிக்கொண்டு இருக்கும் நேரத்தில், என்னதான் வனத்துறை விழாவாக இருந்தாலும் புலிப் படங்களைப் போட்டு விளம்பரம் செய்வதற்குத் தைரியம் வேண்டும். செய்துதான் பார்ப்போமே என்ற ஒரு உள்நோக்கமும் இருக்கலாம்.
இருக்கலாம்!
இதுதான் மத்திய அரசுக்கு, தமிழக அரசு மீது மிகப் பெரிய நெருடலை உருவாக்கி வருகிறது. தமிழ்நாட்டில் நடக்கத் தொடங்கி இருக்கும் மாணவர் போராட்டங்களை, மாநில அரசாங்கமே மறைமுகமாகத் தூண்டிவ்விடுகிறதோ? என்ற அச்சம்தான் அது.
ஆசியத் தடகள சாம்பியன் போட்டியைத தமிழகத்தில் நடத்த எதிர்ப்பு, உள்துறையின் தேசியத் தீவிரவாதத் தடுப்பு மையம் அமைக்கக கண்டனம், மதத் கலவரத் தடுப்பு மசோதா மீது விமர்சனம், ஐ.ஏ.எஸ். தேர்வு விஷயத்தில் மத்திய அரசின் புதிய விதிமுறையை மாற்றக் கோருவது.... என்று, அடுத்தடுத்து மத்திய அரசு கொண்டுவரும் அனைத்துத் திட்டங்களிலும் தனது எதிர்ப்பை முதல்வர் ஜெ. பதிவுசெய்து வருவது மத்திய அரசுக்கு நெருடலை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்குப் பதிலடி கொடுப்பது மாதிரி, மினசாரம், மண்ணெண்ணெய் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் விஷயத்தில் ஏற்கனவே தந்த அளவை மத்திய அரசு குறைத்துக் கொண்டது. கூடங்குளம் அணு உலைக்கு எதிராகப் போராட்டம் நடத்துபவர்களை, மாநில அரசு நினைத்திருந்தால் என்றோ அடக்கியிருக்க முடியும் என்பதும் மத்திய அரசாங்கத்தின் நினைப்பு. இதன் தொடர்ச்சியாகத்தான் இலங்கைப் பிரச்னையையும் பார்க்கிறார்கள்.

முக்கியக் கட்சித் தலைவர் ஒருவர், இன்னொரு தலைவரிடம் பேசும்போது, இந்த மாணவர் போராட்டத்தை அந்த அம்மாவே தூண்டிவிடுவதுபோலத் தெரியது. மத்திய அரசாங்கத்திக்கு இதன் மூலமா நெருக்கடி கொடுக்க நினைக்குது என்று சொன்னாராம். இலங்கைப் பிரஸ்னையில் நாம்தான் மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு எதிராக அரசியல் நடத்த வேண்டும். ஆனால், நாம் செய்ய வேண்டிய அனைத்தையுமே முதல்வர் ஜெ. கனகச்சிதமாய் செய்துவருகிறார் என்று ஈழ ஆதரவுத் தலைவர்களும் சொல்கிறார்கள். அரசாங்க ஆதரவு இருப்பதால், ஈழ ஆதரவுத் தலைவர்கள் இன்னும் ஆக்ரோஷமாகப் போராட்டங்கள் நடத்தத் திட்டமிட்டு வருகிறார்கள் என்றும் பேச்சு. இந்தத் தகவல்கள் மத்திய அரசுக்குப் போனது. அத்ரடிப் போராட்டங்கள் அடுத்த சில நாட்களில் தமிழக்த்தில் அரங்கேற்றலாம் என்ற அதிர்ச்சி தகவல்களை ஐ.பி. அதிகாரிகள் மூலம் கேள்விப்பட்ட டெல்லி மேலிடம் அதிர்ந்துபோனது. அதன் பிறகே, தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் நடத்திவரும் மத்திய அரசு எதிர்ப்புப் போராட்டங்கள் நாளுக்கு நாள் தீவிரமாகி வருவதன் பின்னணியை உன்னிப்புடன் கவனிக்க ஆரம்பித்தது


ஆகையால் மத்திய அரசு தமிழக்த்தில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை என்று காரணம் காட்டி ஆட்சியை கலைக்கும் யோசனையில் இருப்பதாகவும் தகவல்கள் வருகிறது